Image description


அகிலனின் ” வேங்கையின் மைந்தன் ” நாவல் வழி – 


அகிலன்கண்ணன் பார்வையில்


 

அகிலன் அவர்கள் இந்த நாவலை எழுதும் முன் தஞ்சை, புதுகை , பழையாறை, நார்த்தாமலை, சித்தன்னவாசல், விராலிமலை, கொடும்பாளூர், தராசுரம் ,கங்கைகொண்ட சோழபுரம் எனத் தமிழகப் பகுதிகள் பலவற்றையும் மற்றும் இலங்கையையும் சென்று பார்த்து வந்து , குறிப்பெழுதி , படம்பிடித்துச் செய்தி சேகரித்து , மயிலை சீனி வேங்கடசாமி மற்றும் பலரது நூல்கள் நுணுகி ஆய்வு செய்தார்.

 

வேங்கையின் மைந்தன்  ( பக் 348 – 353 , 539- 546 )
பழையாறைக்கு வடக்கே இரு காத தூரம் – சோழபுரம் எனும் படைவீட்டுக் குடியிருப்பு . பொன்னி வள நாட்டை ஒட்டியிருந்தும் அந் நதியின் வளம் அந்த மண்ணுக்கு எட்டவில்லை . கருவேலங் காடு , புஞ்சை வயல், முட் புதர் . அங்கங்கே திட்டுத் திட்டாய்ப் பயிற்சிக் களங்கள்.

 

ஈழப் போர்க்களத்தில் உறவுகளைப் பறிகொடுத்த மக்கள் கூட்டம் மா மன்னரைச் சூழ தம் துன்பம் மறந்து , வாழ்த்தொலி …
வடதளியான சிவன் கோயில் கீழ் வாசலுக்கு முன் பெரும்
மேடையிலிருந்து முழங்குகிறார் ராஜேந்திரர் :
 என் அருமை மக்களே ! ஈழப் போரில் உயிர் துறந்த அத்தனை வீரர்களுக்கும் முதலில் நாம் அஞ்சலி செலுத்துவோமாக!….
அவர்களுக்கு நான் வீரக் கல் நாட்டப் போவதில்லை .அவர்களின் நினைவாகத் தஞ்சைப் பெரிய கோவிலைப் போல ஒரு மாபெரும் கோயில் சோழபுரத்தில் எழுப்பப் போகிறேன். ஒரு நூற்றாண்டு காலமாகத் திரும்பாதிருந்த முடியை அவர்கள் நமக்குத் திருப்பித் தந்து வெற்றி அளித்திருக்கிறார்கள் . முதல் வெற்றியைத் தேடித் தந்த வீரர்களின் மத்தியில் விரைவில் நானே என் தலைநகரத்தை அமைத்துக்கொள்ளப் போகிறேன் . சோழபுரம் விரைவில் நமது சாம்ராஜ்ஜியத்தின் தலை நகரமாகும்.காவேரிச் செழிப்பின் வளைப்பதை விட , என் வீரர்களை வளர்க்கும் கருவேலங் காட்டின் முட் புதரே எனக்குச் சிறந்த இடம் – தயங்காதீர்கள் ! நாம் நினைத்தால் செய்ய முடியாத செயல் ஒன்றும் இல்லை . மாபெரும் புதிய நகரம் ஒன்றை உருவாக்கி , அதன் மத்தியில் இமயம் போன்ற ஒரு கோயிலை எழுப்பி எல்லையில் கங்கையைப் போன்ற ஏரி வெட்டி நீர் நிரப்புவோம் .சோழபுரத்துக்குப் புத்துயிர் கொடுத்து நாமும் புத்துயிர் பெறுவோம்! 

 

 ராஜேந்திரர் கருவில் உருவான கங்காபுரி   


அகிலனின் “வேங்கையின் மைந்தன் ” 


இரண்டாம் பாகம் பக் 406 – 412 , மூன்றாம் பாகம் 539 – 545 )

 

தஞ்சையில் ராஜ ராஜேச்வரத்தை உருவாக்கிய பெரிய சிற்பியார் புகழுடம்பெய்தி விட்டதால் , அவரது புதல்வர் திருச் சிற்றம்பலச் சிற்பியாருக்கு அந்த வாய்ப்புக் கிட்டியது .

 

நான்கு வாரங்களில் களிமண் படிவம் வார்க்கப் பெற்றது ! சிற்பியின் கலைக் கூடத்தில் சுற்றுப்புறச் சுவர்களில் ஆங்காங்கே திரைச் சீலைகளில் நகரத்தின் தோற்றம் ஒவ்வொரு கோணத்தில் !

 

” அற்புதம் சிற்பியாரே ! களிமண் பிரதியில் தோன்றும் இந்த உயிர்த் துடிப்பைக் கருங்கல்லுக்குள் உங்களால் மாற்றிவிட முடியுமா? “
” சக்ரவர்த்திகளே ! இறைவனின் பேரன்பும் பெருங்கருணையும்
துணை நின்றால் இவ் வுலகில் எதைத்தான் சாதிக்க முடியாது ? தங்களது தந்தையார் அருள்மொழித் தேவர் காலத்துக்குப் பிறகு , தாங்கள் இந்த நாட்டில் அதனினும் பன்மடங்கு சீரும் சிறப்பும் வளரப் பாடுபடுகிறீர்கள் . மா மன்னருக்குள்ளது போன்ற அதே ஆவல் இந்த ஏழைச் சிற்பியிடமும் உண்டு .தஞ்சைப் பெரிய கோயிலின் ஆண்மையும் கம்பீர மிடுக்கும் இந்த உலகம் உள்ள அளவும் நிலைத்து நிற்கக் கூடியவை . ஆனால் , கலை நுணுக்கச் சிற்ப வேலைப்பாடுகளில் அதனினும் சிறந்த ஓர் ஆலயம் எழுப்ப வேண்டுமென்ற ஆவலையே அது தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறது. பல்லவர் காலத்தில் தொடங்கிய கலை மலர்ச்சியின் சிகரத்தை நம்மால் மட்டும் தொட்டு விட முடிந்தால் ?…”
” சிற்பியாரே ! நாம் இருவரும் பேராசைக்காரர்கள் ! ” என்றார் ராஜேந்திரர் …..
***** ************ ************

 

 மூன்றாம் பாகத்தின் முதல் அத்தியாயம் ! ஓ ! படித்தால் மட்டுமே பருக முடியும் அந்த அழகோவியத்தை !
கொடும்பாளூர்க் கோமகன்
கல்லோ கவிதை ! அதன்
சொல்லோ கடவுள்
பெரிய கோயிலை எழுப்பி இருபது ஆண்டுகளுக்குப் பிறகு…
கங்கை கொண்ட சோழபுரம் கோயில் நிறைவெய்திய பின் ராஜேந்திரர் சிற்பியிடம் நன்றிக் கடனாக என்ன வெகுமதி அளிப்பதெனத் தெரியாது அவரிடமே , ” தங்களது கலைத் திறனுக்கு ஈடான வெகுமதி எதுவென்று எனக்குத் தோன்றவில்லை .தங்களுக்கு எது விருப்பமோ அதை இப்போதே கேளுங்கள், சிற்பியாரே ! ” கேட்கிறார் .
” என் வாழ்வில் எனக்கு ஒரு குறையுமில்லாமல் தாங்கள் செய்து வைத்திருக்கிறீர்கள் . நான் இறைவன் திருவடி சேரும் நாளில் , தாங்கள் பெற்றுத் தந்த வெற்றியில் எனக்கும் பங்கு வேண்டும் “
” வெற்றியில் பங்கா? “
” என் உயிர் பிரிந்தவுடன் என் பூத உடலுக்கு ஒரு குடம் கங்கை நீர் வேண்டும் .”
” கங்கை நீரின் பெருமையை இப்போதுதான் நான் அதிகமாக உணருகிறேன். பட்டத்து யானை மீது கங்கை ஊர்வலமாக வந்து தங்கள் மாளிகைக்குச் சேருவாள் ! “

 

“சண்டேசுவரர் சிற்பத்தின் வாயிலாக -அம்பிகை அருகிருக்க அனுகிரகம் செய்பவராக எம் பெருமானும் இங்கே முடி வணங்கி நிற்கும் அடியாராக நமது சக்ரவர்த்திகளும் ” இன்றும் அந்த ராஜேந்திரர் அந்தக் கங்கைகொண்ட சோழபுரக் கோயிலிலே…திருச் சிற்றம்பலச் சிற்பியின் கை வண்ணத்தில்
நமக்குக் காணக் கிடைக்கிறார் .
சொற் சித்திரத்தில் அகிலனின் கை வண்ணத்தில் வேங்கையின் மைந்தனில் நமக்கு ராஜேந்திர சோழர் என்றும் காணக் கிடைக்கிறார் !

 

ராஜேந்திர சோழர் ( 1012 – 1044 ) அவர்களின் வாழ்வையும் , அவர் , அன்றைய தென்னிந்தியாவில் மாபெரும் சோழப் பேரரசை விரிவாக்கியதையும் மக்களுக்கு மதிப்பு மிகு நல்லாட்சி நல்கியதையும் அகிலன் தமது முதல் சரித்திர நாவலான ‘ வேங்கையின் மைந்தனி’ல் ( 1960- 61 ) சுவைபட
சித்தரித்துள்ளார். 1963இல் சாகித்திய அகாதமி விருது பெற்ற இந் நாவலை சிவாஜி கணேசன் அவர்கள் மேடை நாடகமாக
நடித்து மகிழ்ந்தார் . சென்னை வானொலிக்காக ஐந்து வாரத் தொடர் நாடகமாக்கும் வாய்ப்புப் பெற்றேன் நான். அப்போதுதான் எனக்கு இந் நாவல் வழி நாவலாசிரியர் அகிலன் பெரும் வியப்பான வினாவை என்னுள் விதைத்தார்.
சரித்திர நாவலில் சமூகப் பார்வைப் பிரதிபலிப்பு சாத்தியமா?
ஆம் , சாத்தியமே என்று அகிலனின் மூன்று சரித்திர நாவல்களின் மூலம் எனக்குப் பதில் அளித்தார்.

 

நம் பழம் பெருமைப் போதையில் ஊறித் திளைத்த நாம் , பணக்கார வீட்டுச் செல்லப் பிள்ளைகளைப் போல் இந்த நூற்றாண்டில் சோம்பிக் கிடக்கிறோமோ எனக் கவலைப் பட்ட
அகிலன் , அந்தக் கால இயல்புக்கேற்ற முறையில் வாழ்க்கையில் போராடி வெற்றிச் சிறப்போடு வாழ்ந்தவர்களை
மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து , இந்தக் காலத்து மக்களைத் தட்டி எழுப்பத் தோன்றப் பெற்ற அகிலன் இந்த நூற்றாண்டுத் தமிழர்களும் இந்தக் காலத்து லட்சியங்களை
வைத்து இன்றையத் தலை முறை , உழைத்துப் போராடி வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டுமென்று லட்சியப் பாத்திரங்களை முன்னோடியாகக் கொள்ள வேண்டி ‘ தென்னிந்தியாவின் அலெக்ஸாண்டர் ‘ என்று போற்றப் பெரும்
ராஜேந்திர சோழரான சரித்திர நாயகரையும் கற்பனைப் படைப்பான கொடும்பாளூர் இளவரசன் இளங்கோவையும்
இந் நாவலில் முக்கிய பாத்திரங்களாக்கினார் அகிலன்.
” தமிழ் நாட்டு வரலாற்றின் பொற்காலம் ராஜேந்திர சோழரின்
ஆட்சிக் காலம் .இந்தியாவில் வடக்கே அவர் வங்கம் வரை சென்று கங்கை நீரைக் கொண்டு வந்தவர்.தெற்கே இலங்கை யிலும் தன் கொடியைப் பறக்கச் செய்தவர் .கிழக்கே கடல் கடந்து கடாரம் வரை தமது ஆட்சியின் அதிகாரத்தைப் பரப்பியவர்.” ( அகிலனின் ‘ எழுத்தும் வாழ்க்கையும் ‘பக் 330 -333)

 

இச் சந்தர்ப்பத்தில் ஒரு குறிப்பு :
சென்னை வானொலிக்காக நான் இந்த வேங்கையின் மைந்தனை பிழிந்து கொடுக்க நேர்ந்த போது நிகழ்ந்தது !
ஒலிப் பதிவின் போது உடனிருந்தேன் .இறுதிக் கட்டக் காட்சி :.
தயாரிப்பாளர் திருமதி புனிதவதி இளங்கோவன் அவர்கள் ” கண்ணா நீங்க கங்கை கொண்ட சோழபுரம் போயிருக்கீங்களா ? ” என்று கேட்க , நான் மொவுனித்திருக்க, ” கட்டாயம் பாக்கணு ம்ப்பா ! ” வேங்கையின் மைந்தன் நாவலைப் படிச்சுட்டு நாங்க
கங்கைகொண்ட சோழபுரம் கண்டு உவந்தோம்! ” எனக் கவி நயமாகச் சொல்லித் தூண்டினார்கள்.

 அதன் பிறகு நாங்கள் குடும்ப சகிதம் சென்றுவந்தோம் .` நீங்கள்?—  (c) அகிலன்  கண்ணன்

=====================================================================================================================

Image description

 

 

 

வால்காவிலிருந்து கங்கை வரை – ராகுல சாங்கிருத்தியாயன் , தமிழ்ப்புத்தகாலயத்தின் பெருமை மிகு வெளியீடு , தமிழாக்கம்   எமது நிறுவனர் க.ண.முத்தையா தமிழ் மக்களின் அறிவுச் சொத்து … கி.மு . 600 முதல் 20 ஆம்   நூற்றாண்டு வரையிலான மனித சமுதாயத்தின் தோற்றம்,வளர்ச்சி,நாகரீகம் – 20 கதைகளாக.36 மொழிகள் தெரிந்து 150 புத்தகங்கள் படைத்த பேராசிரியர் ராகுல்ஜியின் மிக முக்கிய படைப்பிது.      தமிழகத்தில் சிந்தனைப் புரட்சிக்கு வித்திட்ட அறிவார்ந்த நூலிது.இ.தே.ரா (INA )வில் பணியாற்றிய சமூகப்பொறுப்பு மிக்க கண.முத்தையா, தாமே சுவையான நடையில் மொழிபெயர்த்துப் பதிப்பித்த நூலிது.இவைகள் வெறும் கதைகள் அல்ல, சமுதாய வளர்ச்சி,கால மாற்றங்கள் என  கதை வடிவிலான சரித்திர உண்மைகள்.   விலை :350/- பதிப்பக தொலை பேசி :044-28340495 © Tamilputhakalayam  

===================================================================================================================== 

லைப்பு / TITLE : அகிலன்சிறுகதைகள் (2 தொகுதிகள் ) / Akilan Sirukathaigal (1 set in 2 volumes) ஆசிரியர் /AUTHOR: அகிலன் / AKILAN வகை / CATEGORY : (200 சிறுகதைகள்) /SHORT STORY COLLECTION LIBRARY EDITION:HARD BOUND விலை/ PRICE :- INR 1300 /-PUBLISHER: (C) DHAGAM /044-28340495 ISBN: 81-89629-02-6WEIGHT:2.5 KG   

அகிலன் சிறுகதைகள் – 20ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய உலகில் தனிப்பெரும் பங்களிப்புத் தந்த அகிலன் அவர்களின் ௨௦௦ சிறுகதைகளையும் காலவரிசைப்படித் தொகுத்துத் தரப் பெற்றுள்ளது. அகிலனின் இலக்கிய வீச்சுடன் , கரு, உரு,உத்தி இவைகளை பெருமிதத்துடன் தரும் நூலிது.தனிமனித உணர்வு சிக்கல்கள் ,சமூகப் பிரச்சினைகள், என வாழ்வின் சத்தியங்களை எளிய நடையில் பலவண்ண அழகோவியங்களாய்க் கூறும் தொகுப்பிது.contact : tamilputhakalayam@gmail.comphone : 044-28340495 

==================================================================================================================================================  

 புதிய பாதை – அகிலன் கண்ணன் அமுத சுரபி பிப்ரவரி 2012  இதழில் மதுரை திரு.தேசிகாச்சாரி  என்ற வாசகரின் கடிதம்‘பொங்குமோ பொங்கல் ? பொங்குமே பொங்கல் ‘  சிறுகதையில் ராமலிங்கம் தாத்தா -லெட்சுமி பேத்தியின் உரையாடல் வழியாக தற்கால அரசியல், மாநிலங்களுக்கு இடையில் ஏற்படும் சர்ச்சை , மத்திய , மாநில அரசுகளின் நிர்வாகக் குறைபாடுகள் , அந்நிய நாட்டுக் கலாசார மோகம் ஆகிய அனைத்தையும் அகிலன் கண்ணன் சொல்லியிருப்பது அருமை.