புத்தக பட்டியல் 

tamilputhakalayam_pricelist_2016.pdf
விலைப்பட்டியல் தரவிறக்கம் செய்ய இந்த விசையை அழுத்தவும்
Image description

தலைப்பு : வால்காவிலிருந்து கங்கை வரை/Valgavilirunthu gangai varai

ஆசிரியர் : ராகுல சான்க்ரித்யாயன் /Rahul Sankrithyayan

மொழிபெயர்ப்பாளர் :கண.முத்தையா / K.N.Muthaia

விலை :  INR 350/-

வகை: மனித வரலாறு / சிறுகதைகள் 

கட்டமைப்பு : Hard bound / பரிசுப் பதிப்பு 

எடை :675 grams

ISBN:81-89628-11-9

பக்கம் :608 

(படங்களுடன்)

புத்தக அறிமுகம் : கி.மு . 600 முதல் 20 ஆம் நூற்றாண்டு வரையிலான மனித சமுதாயத்தின் தோற்றம்,வளர்ச்சி,நாகரீகம் – 20 கதைகளாக.36 மொழிகள் தெரிந்து 150 புத்தகங்கள் படைத்த பேராசிரியர் ராகுல்ஜியின் மிக முக்கிய படைப்பிது. தமிழகத்தில் சிந்தனைப் புரட்சிக்கு வித்திட்ட அறிவார்ந்த நூலிது.இ.தே.ரா (INA )வில் பணியாற்றிய சமூகப்பொறுப்பு மிக்க கண.முத்தையா, தாமே சுவையான நடையில் மொழிபெயர்த்துப் பதிப்பித்த நூலிது.இவைகள் வெறும் கதைகள் அல்ல, சமுதாய வளர்ச்சி,கால மாற்றங்கள் என கதை வடிவிலான சரித்திர உண்மைகள்


call to buy books 044-28340495 / 9445901234 /  044 2815 6006 / 91 73 73 73 77 42

Image description

தலைப்பு : வேங்கையின் மைந்தன் 

ISBN : 81-89629-13-1

ஆசிரியர் : அகிலன் 

இந்திய அரசின் சாகித்ய அகாதமி பரிசு பெற்றது 

வகை : சரித்திர நாவல் 

விலை : INR400/-

பக்கம் : 832

கட்டமைப்பு :ஹார்ட் பைண்டு 

எடை: 650 grams

புத்தக அறிமுகம் : இராஜேந்திர சோழர் காலத்தை அடிப்படையாகக் கொண்ட நாவல் இது . பல பதிப்புகள் கண்டுள்ள இந்நாவல் தமிழ் சரித்திர நாவல் உலகின் மயில்கல் ஆகும். இக் கதை மாந்தர்களுள் மாமன்னர் இராஜேந்திரர், இளங்கோவேள், அருள் மொழி, ரோகிணி, வந்தியத் தேவர் , வீரமல்லன், போன்றோர் உயிரோவியமாய் வாசகர் நெஞ்சில் வியாபிக்கின்றனர்.

Image description

தலைப்பு : சித்திரப்பாவை

ISBN: 81-89629-05-0

ஆசிரியர் : அகிலன் 

இந்திய அரசின் ஞானபீடப் பரிசு பெற்ற முதல் தமிழ் நாவல் 

வகை : சமூக  நாவல் 

விலை : INR350/-

பக்கம் : 536

கட்டமைப்பு :ஹார்ட் பைண்டு 

எடை: 500 grams

புத்தக அறிமுகம் : இன்றைய இலக்கியம் நாளைய வழிகாட்டியாக அமையக்கூடியது. இந்நாவலில் 'ஆனந்தி' பற்றிய என் கருத்துக்களை எல்லோரும் ஒப்புக்கொள்ள வேண்டுமென்பதில்லை, சிந்தித்துப் பார்த்தால் போதும். நாளைக்கு இந்தச் சமூகத்தில்  'மாணிக்க'ங்கள்  போன்ற போலிகள்  அண்ணாமலைகளுக்கும் ,ஆனந்திகளுக்கும் துரோகம் செய்து வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட இந்நாவல் சிறிதளவாவது தூண்டுதலாக இருக்க வேண்டுமென்பது என் நோக்கம் .

"அழகாக வாழக் கற்றுக்கொள் .

முடிந்தால் வாழ்க்கையை அழகு படுத்து 

முடியாவிட்டால் அசிங்கப்படுதாமலாவது இரு " - அகிலன் 

Image description

தலைப்பு : கயல்விழி

ISBN: 81-89629-15-8

ஆசிரியர் : அகிலன் 

தமிழ்நாடு  அரசின்  பரிசு பெற்ற வரலாற்று  நாவல் 

வகை : வரலாற்று   நாவல் 

விலை : INR400/-

பக்கம் : 608

கட்டமைப்பு :ஹார்ட் பைண்டு 

எடை: 700 grams

புத்தக அறிமுகம் : பாண்டியப் பேரரசைக் களமாகக் கொண்டது  இச் சரித்திர  நாவல். தமிழர் ஆயிரமாயிரம்  ஆண்டுகளாக கனாக் கண்டு  போற்றி வரும் பெண்மையையே கயல்விழியாகப் படைத்து விட்டார் அகிலன்.

தலைப்பு : வெற்றித்திருநகர்

ISBN: 81-89629-14-x

ஆசிரியர் : அகிலன் 

வகை : வரலாற்று   நாவல் 

விலை : INR350/-

பக்கம் : 528

கட்டமைப்பு :ஹார்ட் பைண்டு 

எடை: 500 grams

புத்தக அறிமுகம் : விஜய நகரம் என்றாலே வெற்றித்திருநகரம் என்று பொருள் . உலகில் வேறு எந்த நகரமுமே அவ்வளவு செல்வச் சிறப்போடும், உல்லாசக் களிப்போடும் ,வீரச் செருக்கோடும் வாழ்ந்ததுமில்லை , வேறு எந்த நகரமுமே அவ்வளவு பயங்கரமான முறையில் அழிக்கப் பெற்றதுமில்லை. ஹம்பியின் அழிவுச் சின்னங்கள் என்ற தோற்றத்தில் காட்சியளிக்கும் விஜயநகரத்தின் மாபெரும் தியாகத்தால் இன்று தமிழகம் , ஆந்திரம் ,கன்னட நாடு, கேரளம் இவை நிமிர்ந்தோங்கி நிற்கின்றன. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்ற சீரிய இலட்சியச் சுடரைத் தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்த விசுவநாத நாயக்கன் என்ற ஓர் உத்தமனின் கதை இது . நமது நாட்டின் சார்பில் பல்வேறு சமயத்தவரும் ஒரே கொடியின்கீழ் தேசிய எழுச்சி பெற்று சாதனை புரிந்தனர் . அதற்க்கான விழிப்பு எப்போது இங்கு முதலில் ஏற்ப்பட்டது ? அந்தக் கேள்விக்கான விடையே "வெற்றித்திருநகர்" .